அரசுப் பள்ளி மாணவனுக்கு ஆசிரியர் பாலியல் சீண்டல் - பரபரப்பு புகார்!
மாணவரை பள்ளி ஆசிரியர் கிண்டல் செய்து பாலியல் சீண்டல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் சீண்டல்
கரூர், மணவாசியை அடுத்த வளையக்காரன் புதூரை சார்ந்த மாணவன் நாகராஜன். வன் நாகராஜன். இவர் கருப்பூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொது மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அவரது குரல் பெண் போன்று இருப்பதால்,
மாணவன் புகார்
ஆங்கில ஆசிரியர் செந்தில் குமார் என்பவர் தன்னிடம் ஆபாசமாக பேசுவதும், தொடக் கூடாத இடங்களில் தொடுவது போன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. ஒரு வார காலம் பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தால், வீண் பழி சுமத்தி பள்ளியிலிருந்து வெளியேற்றி விடுவேன் என மிரட்டுவதாகவுன், நான் பள்ளிக்கே அவமானம் எனக் கூறி வருகிறார். அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாடொன்றை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்...! அதிகரிக்கும் உயிரிழப்பு - அச்சத்தில் மக்கள் IBC Tamil
நீதித்துறையில் களையெடுப்பு ஆரம்பம் : வீட்டுக்கு அனுப்பப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி உட்பட 20 பேர் IBC Tamil