பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - காவலரே செய்த கொடூரம்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொல்லை
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்களை தடுக்க காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குற்றத்தை தடுக்க வேண்டிய காவலரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலர் கைது
கரூர் மாவட்டம், அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்த இளவரசன்(38), கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இது குறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ள நிலையில் அதிர்ச்சியடைந்த உடனடியாக இது குறித்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளவரசன் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கியதால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, பின் மீண்டும் காவலர் பணிக்கு திரும்பியவர் என்று கூறப்படுகிறது.