கரூர் திமுகவிற்கு தான் - ஒருங்கிணைப்பு குழுவிடம் கோரிக்கை வைத்த திமுகவினர்..!
தொடர்ந்து பல தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவதற்கு திமுகவின் மாவட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுக ஒருங்கிணைப்பு குழு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட கட்சி நிர்வாகிகளை திமுகவின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
இது ஒரு புறமிருக்க, சென்னை அறிவாலயத்தில் கூட்டணி தொகுதி பங்கீடிற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகின்றது.
இன்று கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகளிடத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது கரூர் தொகுதியை மீண்டும் கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவதற்கு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக ஜோதிமணி உள்ளார். இந்த தேர்தலில் மீண்டும் அவருக்கு சீட் ஒதுக்க, திமுக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
முன்னதாக, சிவகங்கை, ஆரணி தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கரூர் மாவட்ட கட்சி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது திமுக தலைமைக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது.