களைகட்டிய கோபாலபுரம் வீடு; நீண்ட இடைவெளிக்குப் பின்.. முதலமைச்சர் வீட்டில் விசேஷம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சுபநிகழ்ச்சி கவனம் பெற்றுள்ளது.
கோபாலபுரம் இல்லம்
முரசொலி செல்வம் - செல்வி தம்பதியின் மகள் எழிலரசி –ஜோதிமணி தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் ஓவியா. இளைய மகள் காருண்யா வெளிநாட்டில் படித்து வருகிறார்.
அதில் ஓவியாவுக்கு சந்தீப் ரெட்டி என்பவருடன் கடந்த 2021ல் சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில்தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலினும் அவரின் அண்ணன் அழகிரியும் ஒன்றாகக் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
வளைகாப்பு
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் ஓவியா கர்ப்பமடைந்ததை தொடர்ந்து தற்போது வளைகாப்பு நிகழ்ச்சியை கலைஞர் வசித்த கோபாலபுரம் இல்லத்தில் வைத்து நடத்தியுள்ளனர். தொடர்ந்து, கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாவிடம் ஆசி வாங்கி தொடங்கிய விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஓவியாவை ஆசிவதித்தார்.
அவருடன் சில மூத்த அமைச்சர்களும் கலந்துக் கொண்டதாக தெரிகிறது.
மேலும் அழகிரி மற்றும் மனைவி காந்தி அழகிரி, மு.க.தமிழரசு மற்றும் மாறன் குடும்பத்தினர் கலந்துக் கொண்டுள்ளனர்.