பள்ளி தமிழ் பாட புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வரலாறு - சிறப்பு தொகுப்பு!
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வரலாறு பாடமாக அமைந்தனுள்ளது.
கருணாநிதி வரலாறு
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2 கோடி 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்குவதற்காக மாவட்டங்களுக்கு மூன்று கோடியே 50 லட்சம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதே போல, 50 லட்சம் புத்தகங்கள் வருகின்ற மே மாதம் முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித்துறை அதிகாரி தெரிவித்தார். இந்த சூழலில் மாணவர்களுக்கு 2017-2018ஆம் ஆண்டு முதல் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு திருத்தப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டன. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ் பாட புத்தகம்
இந்த நிலையில், 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழியாக்க முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, 10ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தின் உரைநடை பகுதியில் பன்முக கலைஞர் என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வரலாறு குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் அவர் ஆற்றிய பணிகள் குறித்து 5 பக்கங்களுக்கு பாடமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தையும் பதித்துள்ளனர். அரசியல் மற்றும் எழுத்து உலகில் சிறந்து விளங்கிய அவரின் திறமைகளை விளக்கும் வகையில் 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil