திமுக முப்பெரும் விழா - ஸ்டாலின் என்றாலே உழைப்பு ; AI மூலம் உரையாற்றிய கருணாநிதி

M K Stalin M Karunanidhi DMK
By Karthikraja Sep 17, 2024 01:11 PM GMT
Report

திமுக முப்பெரும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

திமுக முப்பெரும் விழா

பேரறிஞர் அண்ணா பிறந்த விழா, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, திமுகவின் 75-வது ஆண்டு பவள விழா என திமுகவின் முப்பெரும் விழா சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எ.சி.ஏ மைதானத்தில் தொடங்கியது. 

திமுக பவள விழா

விழாவில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து 1 லட்சம் தொண்டர்கள் விழாவிற்கு வந்துள்ளனர். 

மோடி, பெரியார் பிறந்தநாள் - விஜய் வாழ்த்தால் வெடித்த சர்ச்சை

மோடி, பெரியார் பிறந்தநாள் - விஜய் வாழ்த்தால் வெடித்த சர்ச்சை

கருணாநிதி

உரை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது. விழா மேடையில் முதல்வர் ஸ்டாலினின் இருக்கைக்கு அருகே மற்றொரு இருக்கை போடப்பட்டு இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி AI தொழில் நுட்பம் மூலம் பேசும் வகையில் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. 

AI தொழில்நுட்பம் கருணாநிதி ஆற்றிய உரையில் “பெரியார் வடித்த கொள்கையை, அண்ணா வகுத்த பாதையை, என்னால் கட்டி காக்கப்பட்ட திடமான இயக்கத்தை ஓங்கி ஒலிக்க செய்து கம்பீரமாக ஆட்சியில் அமர வைத்திருக்கும் மு.க.ஸ்டாலினை எண்ணி எண்ணி என் மனம் பெருமை கொள்கிறது; ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு, உழைப்பு.

55 ஆண்டுகளாக கட்சிக்காக அயராது உழைத்து, திராவிட செம்மலாய் இந்தியாவில் சிறப்பான முதலமைச்சராக சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, பாதையில் ஆட்சியை சிறப்பாக வழி நடத்துகிறார் ஸ்டாலின். வாழ்க பெரியார், அண்ணாவின் புகழ் ஓங்குக திராவிட மாடல்” என பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கி வருகிறார்.