50 லட்சத்துக்கு விற்பனையான கருணாநிதி நினைவு நாணயம் - இவர்களுக்கு மட்டும் இலவசம்

M K Stalin M Karunanidhi DMK
By Karthikraja Aug 21, 2024 07:45 AM GMT
Report

கருணாநிதி நினைவு நாணயம் ஒரே நாளில் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம்

சமீபத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டார். முதல்வர் ஸ்டாலின் அதை பெற்றுக்கொண்டார். 

karunanidhi 100rs coin release

இந்த ரூ.100 நாணயங்கள் புழக்கத்துக்கு வருமா என திமுகவினர் எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில், 10,000 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

100ரூபாய் கருணாநிதி நினைவு நாணயம் - வாங்குவது எப்படி?

100ரூபாய் கருணாநிதி நினைவு நாணயம் - வாங்குவது எப்படி?

நாணயம் விற்பனை

இதனையடுத்து அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்று ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச்சென்றனர். நேற்று மட்டும் 500 நாணயங்கள் 50 லட்ச ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. இதில் தோழமை கட்சி தலைவர்களுக்கு 1 நாணயம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. 

இன்னும் 500 நாணயங்களே எஞ்சியுள்ள நிலையில், விஐபிக்கள் என்ன விலை கொடுத்தேனும் நாணயத்தை வாங்கி செல்வதால் இன்றே நாணயங்கள் விற்று தீர்ந்து விடும் என தலைமை கழக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். நாணயம் கிடைக்காத என ஏக்கத்தில் உள்ள தொண்டர்கள் 100 ரூபாய் கொடுத்து இந்த நாணயத்தை வாங்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.