கர்நாடகாவில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் பாஜக தலைவர் - சிக்கலில் பாஜக
நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பல இடங்களிலும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றது.
கரும்பு விவசாயி சின்னம்
தேர்தல் களத்தில் நிற்க துவங்கியது முதல் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் தான் போட்டியிட்டு வந்தது. ஆனால், இன்னும் தேர்தல் ஆணையத்தின் அங்கிகாரம் பெற்ற கட்சியாக அக்கட்சி மாறவில்லை என்ற காரணத்தால், சின்னம் கட்சிக்கு என ஒதுக்கப்படவில்லை.
அது இந்த தேர்தலில் கட்சிக்கு சின்னமே இல்லாமல் போகும் அளவிற்கு சென்றுள்ளது. எப்படியும் சின்னத்தை வாங்கி விடுவேன் என போராடி வந்த சீமான், இறுதியில் தோல்வியையே சந்தித்தார். அக்கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டு, தமிழகத்தில் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது.
இதற்கு பாஜக தான் காரணம் என சீமான் பல இடங்களில் குற்றம்சாட்டி வருகின்றார். இந்த சூழலில் தான் தற்போது கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவில் பாஜகவிற்கு எதிராக வந்துள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் முக்கிய தலைவராக இருந்தவர் ஈஸ்வரப்பா.
கர்நாடகாவில் சிக்கல்
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே போல பாஜகவின் முக்கிய தலைவரும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, தனது மகன்களான பி.ஒய்.ராகவேந்திரா மற்றும் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு பதவி மற்றும் அதிகாரத்தைப் கொடுத்து தன்னை ஒதுக்குகிறார் என்று ஈஸ்வரப்பா குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார்.
தற்போது நடைபெறும் மக்களவை தேர்தலில் சுயேட்சையாக சிவமொகா தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவருக்கு தான் தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
28 தொகுதிகளை கொண்ட கர்நாடகா மக்களைக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது குறிப்பிடுகிறது.