கார்த்தி சிதம்பரம் சொன்ன அந்த ஒரு வார்த்தை; பொங்கிய பாஜகவினர் - பரபரப்பு!
கார்த்தி சிதம்பரத்துக்கு பாஜக-வினர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையம் நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி காணொளி காட்சியின் வாயிலாக புதிய கட்டடங்களை திறந்து வைத்த இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வந்திருந்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னையிலிருந்து காரைக்குடிக்கு கம்பன் ரயில் விட வேண்டும், காரைக்குடி ரயில் நிலையத்தை மதுரை கோட்டத்திலிருந்து திருச்சிக் கோட்டத்திற்கு மாற்ற வேண்டும், கோட்ட மேலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
பரபரப்பு சம்பவம்
தமிழ்நாட்டில் ரயிலில் வழங்கப்படும் வடநாட்டு உணவான சப்பாத்தியை தவிர்த்துவிட்டு இங்குள்ள உணவு வகைகளை வழங்க வேண்டும் என அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே மாவட்ட பாஜக தலைவர் மேப்பல் சக்தி, மேடையில் அரசியல் பேசக்கூடாது எனக்கூற,
பதிலுக்கு கார்த்தி சிதம்பரம் தரப்பினர் சத்தமிட இரண்டு கட்சி நிர்வாகிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, காவல்துறையினர் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து பிரச்னை ஏற்படாமல் தடுத்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.