Monday, Jul 14, 2025

விபத்தில் சிக்கிய எம்.பி. கார்த்தி சிதம்பரம் - அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

Accident Erode
By Thahir 2 years ago
Report

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த கார்த்தி சிதம்பரம் எம்.பியின் கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரச்சாரத்தை முடித்துவிட்டு  திரும்பி கார்த்தி சிதம்பரம் 

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் கார்த்தி சிதம்பரம். இவர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.

இதன் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தன்னுடைய காரில் கார்த்தி சிதம்பரம் நேற்று நள்ளிரவு கும்பகோணம் சென்று கொண்டிருந்தார்.

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் 

அப்போது கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே அவர் வந்த கார் திடீரென விபத்தில் சிக்கியது. கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து மினிபஸ் கரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

Karthi Chidambaram was involved in an accident

அப்போது கரூரிலிருந்த வந்த காரும், மினி பஸ்சும் நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கார், கார்த்தி சிதம்பரம் எம்.பி வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் கார்த்தி சிதம்பரம் எம்.பி தன்னுடன் வந்த வேறு ஒருவரின் காரில் ஏறிப் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.