தெரியுமா உங்களுக்கு - "ராமர் தீவிரமான அசைவ பிரியர்" - ராமாயணத்திலே இருக்கு பாருங்க - கார்த்தி சிதம்பரம்..!
அயோத்தி ராமர் கோவில் திறக்கும் நிகழ்வு நெருங்கும் நிலையில், ராமர் குறித்தான சர்ச்சைகளை தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
கார்த்தி சிதம்பரம் சர்ச்சை
ராமாயணத்தை குறித்து கார்த்தி சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், 'உணவு விஷயத்தில் கொந்தளித்துபோன் அனைவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்' எனப் பதிவிடுள்ளார்.
To all those getting agitated by dietary choices. pic.twitter.com/kVRO3shazG
— Karti P Chidambaram (@KartiPC) January 11, 2024
மேலும் அவர், 'வால்மீகி எழுதிய ராமாயணத்தில் பல இடங்களில் ஸ்ரீராமன் தீவிரமான அசைவப் பிரியர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். ராமன் வனவாசம் போக வேண்டும் என்ற நிலைவந்த போது ராமன் வருத்தத்தோடு தன் தாயாரிடம் சொன்னான் 'அம்மா நான் ராஜாங்கத்தையும் பரிபாலனத்தையம் இழக்க வேண்டும்.
மன்னர்களுக்கே உரித்தான எல்லா சுகங்களையும் இழக்க வேண்டும். சுவை மிகுந்த இறைச்சி உணவுகளையும் இழக்க வேண்டும்' என்று கூறியதாக ராமாயணத்தை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்.
சர்ச்சை
இவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு, நாட்டில் இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும், இறைச்சி கடைகைளையும் மூட வேண்டும் என்று பாஜக சார்பில் கோரிக்கைகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து தான், எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் இது போன்ற சர்ச்சை கூறிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதே நேரத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் வரும் 22-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும், இறைச்சி கடைகளும் மூடியிருக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.