T20 WC: ஹாட்-ட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்திய சென்னை வீரர்!
கார்த்திக் மெய்யப்பன், ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார்.
கார்த்திக் மெய்யப்பன்
இளம் சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன்(22). இவர் சென்னையில் பிறந்தார். குடும்பம் துபாயில் குடியேறியது. இளம் வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடி வருகிறார். வலது கை லெக்-ஸ்பின்னர்.
கடந்த 2021 டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 8 ஒருநாள் மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது இலங்கை அணிக்கு எதிராக டி20 உலகக் கோப்பையின் முதல் சுற்று போட்டியில் ஹாட்-ட்ரிக் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.
ஹாட்-ட்ரிக் விக்கெட்
ஆட்டத்தின் 15-வது ஓவரில் பனுகா ராஜபக்சே, அசலாங்கா மற்றும் இலங்கை கேப்டன் ஷனகா விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீசிய 3 பந்துகளில் கைப்பற்றினார். இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய அவர் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
“பந்தை விக்கெட் டூ விக்கெட் வீச வேண்டும் என முடிவு செய்தேன். உலகக் கோப்பையில் ஹாட்-ட்ரிக் என்ற அந்த இனிய தருணத்தில் மூழ்கி உள்ளேன். அதுவும் ஷனகா விக்கெட் அற்புதமான ஒன்று” என கார்த்திக் தெரிவித்துள்ளார்.