உலகின் நம்பர் 1 பந்துவீச்சாளர் இவர்தான் - அஸ்வின் இல்லை...ஆனால் தமிழக வீரர் தான்..!
இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா இந்திய அணியின் இளம் வீரர் வருன் சக்கரவர்த்தியை பாராட்டி பேசியுள்ளார்.
தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். இவர் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு தேர்வாகி உள்ளார்.
இதனிடையே இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மிகச் சிறந்த முறையில் விளையாடி வருகிறார்.தன்னை பொருத்தவரை ரவீந்திர ஜடேஜாவை தவிர்த்து ஒரு சிறந்த சுழற்பந்துவீச்சாளர் யார் என்றால் அது நிச்சயம் வருண் சக்கரவர்த்தியாகத் தான் இருக்கும் என்று பாராட்டியுள்ளார்.
இவருடைய பந்தை அவ்வளவு எளிதாக கணிக்க முடியாததால் இவரை மிஸ்டரி ஸ்பின்னர் என்று அனைவரும் கிரிக்கெட் உலகில் அழைக்கின்றனர். மேலும் வருண் பற்றிய என்னுடைய ஒரே கவலை அவருடைய உடற்தகுதி தான். அதனை அவர் சரியாக வைத்துக்கொண்டால் என்னுடைய முதன்மை சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தான் என தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார்.