யாரும் அறியாத நடிகர் கார்த்திக் முதல் மனைவியின் வைரல் ஃபோட்டோ - யார் தெரியுமா?
நடிகர் கார்த்திக்கின் முதல் மனைவியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்திக்
பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கியவர் நவரச நாயகன் கார்த்திக். இதன்பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் காதல் மன்னனாகவும் வலம் வந்தார்.
1988ஆம் ஆண்டு சோலைக்குயில் எனும் படத்தில் தன்னுடைய இணைந்து நடித்த நடிகை ராகினியை காதலித்து அதே ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.
மனைவி ஃபோட்டோ
இதன்பின் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய மனைவியில் சொந்த தங்கையான ரதியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் கௌதம் கார்த்திக் தற்போது சினிமாவில் நாயகனாக வலம் வருகிறார்.
சமீபத்தில், அன்னையர் தின ஸ்பெஷலாக பிரபலங்கள் தங்களது அன்னையின் புகைப்படங்களை வெளியிட கௌதம் கார்த்திக் தனது அம்மாவின் போட்டோவை வெளியிட்டார்.
அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.