குஷ்பூ கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழுத கார்த்திக்; அவ்வளவு காதலா - உடைந்த ரகசியம்!
கார்த்திக் தனது திருமணத்தில் அழுததாக குஷ்பூ மனம் திறந்துள்ளார்.
குஷ்பூ திருமணம்
80 மற்றும் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் குஷ்பூ அளித்த பேட்டி ஒன்றில், சுந்தர் சி மற்றும் குஷ்பூ காதல் ரகசியங்கள் எல்லாமே கார்த்திக்கும் தெரியுமாம்.
கார்த்திக் செயல்
அதனால் இவர்களின் காதல் கைகூடுமா கூடாதா என்ற ஒரு பயம் கார்த்திக்குக்கும் இருந்திருக்கிறது. முதன் முதலில் திருமண செய்தியை கார்த்திக்கிடம் தான் சுந்தர்சியும் குஷ்புவும் கூறியிருக்கிறார்கள். அப்போது அதை கேட்டு ஆனந்தத்தில் அழுதாராம்.
அதன்பின் திருமணத்தில் ஆனந்தத்தில் இருவரையும் பார்த்து அழுதாராம். அதன் பிறகு சுந்தர் சி யும் குஷ்புவும் கார்த்திக்கின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க என் தம்பியும் தம்பி பொண்டாட்டியும் என் காலில் விழுகிறார்கள் என நினைத்து அப்போதும் அழுது கொண்டே தான் ஆசீர்வாதம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.