திமுக அரசு என்பது நிலையானது இல்லை - திருமாவுடன் கைகோர்த்த கார்த்திக் சிதம்பரம்!
சமுதாய ரீதியில் ஒரு தலித்தை முதலமைச்சராக யாரும் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற திருமாவளவனின் கருத்தை நான் ஏற்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
புதுக்கோட்டையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் திமுக அரசு என்பது நிலையானது இல்லை. மாநில அரசுதான் நிலையானது.
ஆகவே, எந்தச் சூழலிலும் ஒரு தலித்தை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழல் இங்கே இல்லை என திருமாவளவன் பேசியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
கார்த்தி சிதம்பரம்
அதற்கு தலித்கள் முதலமைச்சர்களாக வர முடியவில்லை என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் கருத்தை ஏற்கிறேன்; பல மாநிலங்களில் பல கட்சிகளில் தலித் தலைமையை ஏற்பதில் பல மாநிலங்களில் தயக்கம் காட்டுகிறார்கள்.
அதை தான் நேரடியாக பார்த்து இருக்கிறேன் எனக்கு நன்றாக தெரியும்.சமுதாய சூழல் அவ்வாறு உள்ளது என்று தெரிவித்தார். தமிழகத்திலும் அதே நிலைமைதான் நீடிக்கிறது என இவ்வாறு கார்த்திக் சிதம்பரம் பதில் அளித்தார்