அடிக்கடி சிறுநீர் கழித்த சிறுவன் - பிறப்புறுப்பில் சூடுவைத்த ஆசிரியை..!

Karnataka Child Abuse Crime
By Sumathi Sep 03, 2022 07:09 AM GMT
Report

3வயது சிறுவன் அவனது ஆடையில் சிறுநீர் கழித்ததால், ஆசிரியை அவனது பிறப்புறுப்பில் சூடுவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 3 வயது சிறுவன்

கர்நாடகா துமகுருவில் 3 வயது சிறுவன் அங்கன்வாடியில் பயின்று வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அந்த சிறுவன் தனது தாயை இழந்துள்ளான். தற்போது இந்த சிறுவனை அவரது தந்தையும் பாட்டியும் கவனித்து வருகின்றனர்.

அடிக்கடி சிறுநீர் கழித்த சிறுவன் - பிறப்புறுப்பில் சூடுவைத்த ஆசிரியை..! | Karnataka Teacher Burns Private Part Of 3 Year Old

இந்நிலையில், இந்த சிறுவன் அடிக்கடி தனது ஆடையில் சிறுநீர் கழித்துள்ளார். ஒரு கட்டம்வரை பொறுமையாக இருந்த 28 வயதான அங்கன்வாடி உதவி ஆசிரியை ரஷ்மி, கோவத்தில் தீக்குச்சிகள் கொண்டு சிறுவனில் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார்.

சூடுவைத்த ஆசிரியை

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர்கள், புகார் அளித்துள்ளனர். மேலும், இதுகுறித்து அங்கன்வாடி ஆசிரியர் நாகரத்னா கூறும்போது, ரஷ்மி குறும்புக்காரர். அவள் கடந்த காலத்தில் என் கையெழுத்தை கூட போலியாக போட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறாள்.

அடிக்கடி சிறுநீர் கழித்த சிறுவன் - பிறப்புறுப்பில் சூடுவைத்த ஆசிரியை..! | Karnataka Teacher Burns Private Part Of 3 Year Old

இப்போது, நான் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார். குற்றம் சாட்டப்பட்ட ரஷ்மிக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ரஷ்மியின் நான்கு வயது மகனும் அதே மையத்தில் படித்து வருகிறார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட 17 குழந்தைகளும் அங்கு படித்து வருகின்றனர். தாலுகா குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலரின் பரிந்துரையின் பேரில், அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை துணை இயக்குநர் ஸ்ரீதர் எம்.எஸ் தகவல் தெரிவித்துள்ளார்.