மிரட்டி ஓரினச் சேர்க்கை; தேவகவுடா குடும்பத்துக்கு சிக்கல் - சூரஜ் ரேவண்ணா கைது!
சூரஜ் ரேவண்ணா மீது இளைஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார்
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை வெடித்தது. தொடர்ந்து, அவரது வீட்டு பணிப்பெண், கட்சியின் பெண் நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பிரஜ்வலின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது 24 வயதான இளைஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,
சூரஜ் ரேவண்ணா கைது
“ஜூன் 6-ம் தேதி ஹாசன் மாவட்டத்தில் கனிகட்டா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் சூரஜ் ரேவண்ணாவை சந்தித்தேன். அப்போது தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார்.
இதனை வெளியே சொன்னால் என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்றுவிடுவேன் என மிரட்டினார்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சூரஜ் ரேவண்ணா, ஹொலேநர்சிப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், “சூரஜ் ரேவண்ணா பிரிகேட் அமைப்பின் பொருளா ளராக இருக்கும் சிவகுமார் (30), அவரது நண்பர் சேத்தன்(24) ஆகியோர் ரூ.5 கோடி தராவிட்டால் என் மீது பொய் புகார் தரப்போவதாக மிரட்டுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.