முஸ்லீம்னா தீவிரவாதியா.. வகுப்பறையில் பேராசிரியர் பேச்சால் மாணவர் ஆதங்கம் - வைரல் வீடியோ!

Viral Video Karnataka
By Sumathi Nov 29, 2022 04:46 AM GMT
Report

மாணவரை வகுப்பில் பயங்கரவாதி என குறிப்பிட்ட பேராசிரியருக்கு கண்டனம் எழுந்து வருகிறது.

 பேராசிரியர் பேச்சு

கர்நாடகா, பெங்களூரு உடுப்பியில் மனிப்பல் தொழில்நுட்ப கல்லூரி உள்ளது. அங்கு வகுப்பறை ஒன்றில் பேராசிரியர் ஒருவர் வகுப்பு எடுத்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாணவர் ஒருவர் குறுக்கிட்டு கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

முஸ்லீம்னா தீவிரவாதியா.. வகுப்பறையில் பேராசிரியர் பேச்சால் மாணவர் ஆதங்கம் - வைரல் வீடியோ! | Karnataka Student Out Professor Calling Terrorist

அதற்கு பேராசிரியர் மாணவரின் இஸ்லாம் மதத்தை சுட்டிக்காட்டி கசாப் என பயங்கரவாதியுடன் தொடர்பு படுத்தி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், உடனே என்னை எப்படி நீங்கள் பயங்கரவாதி என சொல்லலாம் என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் விளையாட்டாகதான் சொன்னேன் என மன்னிப்பு கேட்டார்.

மாணவன் ஆதங்கம்

ஆனால் மாணவன் விடாமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதற்கு நீ என் மகன் போன்றவன் எனக் கூறியுள்ளார். உடனே மாணவன் வகுப்பறையில் அனைவரது முன்னிலையிலும் உங்களது மகனை பயங்கரவாதி என்றுதான் அழைப்பீர்களா? எனக் கேட்டு நீங்கள் ஒரு ஆசிரியர் கற்பிக்க வேண்டும். இனி இவ்வாறு அழைக்காதீர்கள் என எடுத்துரைத்துள்ளார்.

இதுகுறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாணவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு, எம்.ஐ.டி பேராசிரியரை பணி இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

மேலும், சமூக வலைதளங்களில் பலர் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.