மாஸ்டர் திரைப்பட நடிகையை படுக்கைக்கு அழைத்த பேராசிரியர் - வலுக்கும் கண்டனம்..!
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுவுந்தர்யா.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார். இதனிடையே சமூக வலைத்தளத்தில்,
மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் படுக்கைக்கு அழைத்து மோசமான வார்த்தைகளை பயனபடுத்தி ஆபாசமாக கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அந்த நபரின் பதிவை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் சவுந்தர்யா பகிர்ந்துள்ளார்.
சவுந்தர்யா வெளியிட்டுள்ள பதிவில் ‘இந்த நபர் மதுரையை சேர்ந்த பேராசிரியர் என்று அவரது சமூக வலைத்தள பக்கத்தில் உள்ளது.
ஒரு பேராசிரியர் பெண்ணிடம் இப்படி பேசி இருப்பது வெட்கக்கேடு. இவரது கல்லூரியில் படிக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்' என்று பதிலடி கொடுத்து விளாசியுள்ளார்.
இதையடுத்து அந்த பேராசிரியருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆபாசமாக பேசியவரை வலைத்தளத்தில் அம்பலப்படுத்திய சவுந்தர்யாவுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர்.