அப்போ நீட் தேர்வில் தோல்வி.. இப்போ ரூ.72.3 லட்சத்தில் வேலை - யார் இந்த இளம்பெண்!
நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவிக்கு ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
மாணவி ரிதுபர்ணா
கர்நாடகா, மங்களூருவை சேர்ந்தவர் மாணவி ரிதுபர்ணா (20). இவர் அடியாரில் உள்ள சயாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன் பொறியியல் பிரிவில் இறுதி ஆண்டு பயின்று வருகிறார்.
இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.72.2 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் கர்நாடக சட்டப்பேரவைத் தலைவர் யூ.டி.காதர் சயாத்ரி கல்லூரிக்கு சென்று அவரை பாராட்டினார். முதலில் மருத்துவம் படிக்க வேண்டும் என விரும்பிய ரிதுபர்ணா, நீட் தேர்வை எழுதியுள்ளார்.
அவருக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில் பொறியியலை தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸில் இன்டெர்ன்ஷிப் செய்ய வாய்ப்பை பெற்றார்.
ரூ.72 லட்சம் சம்பளம்
ஒரு மாதத்தில் முடிக்கக்கூடிய வேலைகளை அவருக்கு கொடுத்துள்ளார். அதனை இரவு பகலாக உழைத்து ஒரே வாரத்தில் அளித்துள்ளார். அவரின் அர்ப்பணிப்பையும், திறனையும் மதிப்பீடு செய்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், அவருக்கு வருடத்திற்கு ரூ.72.3 லட்சம் சம்பளத்தில் பணி வாய்ப்பை வழங்கியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ஜெட் என்ஜின் தயாரிப்பு பிரிவில் பணி செய்ய தேர்வாகியுள்ளார். தற்போது கல்லூரி படிப்பை முடிக்க உள்ள நிலையில், டெக்சாசில் உள்ள அலுவலகத்தில் பணிக்கு சேர உள்ளார். இதன் மூலம் 20 வயதில் மதிப்புமிக்க நிறுவனத்தில் பணி செய்யும் இளம் பெண் என்ற இடத்தை அடைந்துள்ளார்.