சிறுவனை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர் - அலறிய தாய்!
10 வயது மாணவனை ஆசிரியர் முதல் மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்திரம்
கர்நாடகா, ஹட்லி கிராமத்தில் அரசுப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஒப்பந்த ஆசிரியராக முத்தப்பா எல்லப்பா குரி(45) என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு 4 ஆம் வகுப்பில் பாரத் பாரிகேரி என்ற 10 வயது மாணவன் படித்து வருகிறார்.

இவரது தாய் கீதாவும் அதே பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராகப் பணிபுரிகிறார். மாணவன் பாரத் வகுப்பில் சேட்டை செய்ததாகக் கூறி ஆசிரியர் முத்தப்பா அவரை இரும்பு ராடு கொண்டு கடுமையாக அடித்துள்ளார்.
மாணவன் பலி
வலியில் கத்திய சிறுவனின் சத்தம் கேட்டு வந்த தாய் ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து ஆசிரியர் கீதாவையும் தாக்கியுள்ளார். இதனை தடுக்க வந்த மாணவனை முத்தப்பா மாடியில் இருந்து கீழே வீசியுள்ளார்.
உடனே மாணவனையும், ஆசிரியரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியரை தேடி வருகின்றனர்.