முக்கோண காதல்.. காதலனை மாடியில் இருந்து தள்ளிய சீரியல் நடிகை - பகீர்!

Attempted Murder Serials Relationship
By Sumathi Nov 03, 2022 05:30 PM GMT
Report

சீரியல் நடிகை 2வது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை மாடியில் இருந்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம் 

தெலுங்கு சீரியலில் நடித்து வருபவர் நடிகை நாகவர்த்தினி. திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சூர்யநாராயணன் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் இருவரும் பஞ்சாரா ஹில்ச் அருகே கிருஷ்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்துள்ளனர்.

முக்கோண காதல்.. காதலனை மாடியில் இருந்து தள்ளிய சீரியல் நடிகை - பகீர்! | Telangana Actress Murdered Her Lover

இந்நிலையில், இவருக்கு ராஜமுந்திரியைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதனை அறிந்த சூர்யநாராயணன் காதலியை கண்டித்துள்ளார். இதனால் நாகவர்த்தினி காதலனை வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார்.

காதலி வெறிச்செயல்

தொடர்ந்து, 2வது காதலனுடன் அதே வீட்டில் வசித்துள்ளார். இதுகுறித்து தெர்யவரவே முதல் காதலன் அவரது வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளார். தன்னுடன் வருமாறும் அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காதலி இங்கிருந்து போய்விடுமாறு கூறியுள்ளார்.

ஆனால், சூர்யநாராயணன் கேட்காமல் தகராறு செய்ததால் 2வது மாடியிலிருந்து அவரை காதலியும், ஸ்ரீநிவாஸும் கீழே தள்ளியுள்ளனர். இதில் விழுந்து உயிருக்கு போராடிய காட்சிகளை பலர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர்.

அதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து காதலியையும், அவரது 2வது காதலனையும் கைது செய்துள்ளனர். மேலும், விசாரணையில், நாகவர்த்தினி ஏற்கனவே திருமணம் ஆகி கணவரை பிரிந்து வந்தவர் என்பது தெரியவந்தது.