மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி வீசிய மருமகன் - பகீர் காரணம்!

Attempted Murder Karnataka Crime
By Sumathi Aug 13, 2025 09:08 AM GMT
Report

மருமகன், மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குத்திக்காட்டிய மாமியார் 

கர்நாடகா, கொரட்டகெரே பகுதியில் பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட ஒரு கையுடன் தெருநாய் ஒன்று சுற்றிக் கொண்டிருந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மனித கையை மீட்டு விசாரணை நடத்தினர்.

மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி வீசிய மருமகன் - பகீர் காரணம்! | Karnataka Son In Law Arrested For Killing Mil

அப்போது 19 இடங்களில் துண்டிக்கப்பட்ட உடலின் பல்வேறு பாகங்களை ஒன்றன் பின் ஒன்றாக மீட்டனர். ஆனாலும் தலை மட்டும் கிடைக்கவில்லை. தொடர்ந்து பெல்லாவியை சேர்ந்த 42 வயதான லட்சுமி தேவி என்ற பெண் காணாமல் போனது தெரியவந்தது.

இதற்கிடையில் பெண்ணின் தலையை கண்டுபிடித்தனர். பின் மாயமான லட்சுமி தேவியின் கணவர் பசவராஜை அழைத்து வந்து காட்டிய போது அது தனது மனைவியின் தான் என்று அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், லட்மிசு தேவியின் மருமகன் ராமச்சந்திரய்யா(40) என்பவர் இந்த படுகொலையை திட்டம் போட்டு அரங்கேற்றியது தெரியவந்தது. ராமசந்திரய்யாவுக்கு ஏற்கெனவே ஒரு திருமணம் நடைபெற்றிருந்த நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

திருமணத்தை மீறிய உறவு - யூடியூப் பார்த்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி!

திருமணத்தை மீறிய உறவு - யூடியூப் பார்த்து கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி!

மருமகன் வெறிச்செயல் 

இந்நிலையில் லட்சுமி தேவியின் 20 வயதான மகள் தேஜஸ்வியை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 20 வயது வித்தியாசம் உள்ள நிலையில், அதை அடிக்கடி சுட்டிக்காட்டி குத்திக் காண்பித்துள்ளார் மாமியார்.

மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி வீசிய மருமகன் - பகீர் காரணம்! | Karnataka Son In Law Arrested For Killing Mil

இதனால் ஆத்திரத்தில் மாமியாரை கொலை செய்ய சதிஷ், கிரண் என்பவர்களை அழைத்து 4 லட்சம் ரூபாய் பேரம் பேசி முன்பணமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். அவரை கொலை செய்த பின் உடலை மறைப்பதற்கும் என ஒரு சொகுசு காரை வாங்கி சதிஸ் பெயரில் பதிவு செய்திருக்கிறார்.

சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த மாமியாரை வழியிலேயே மடக்கி கடத்தியுள்ளனர். காரில் செல்லும்போதே அவரது கழுத்தை நெரித்து கொலை செய்த அவர்கள், உடலை சதீசின் விவசாய தோட்டத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தி அவரது உடலை துண்டு, துண்டாக வெட்டி 19 இடங்களில் வீசியதாக வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் பல் டாக்டர் ராமசந்திரய்யா உள்பட 3 பேரையும் கைது செய்தனர்