15 மாத குழந்தையின் கை, கால்களை திடீரென கடித்த பெண் - கதறிய பெற்றோர்!
15 மாத பெண் குழந்தையை, பெண் கொடூரமாக தாக்கி, கடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியடையவைத்துள்ளது.
பெண் ஊழியர் கொடூரம்
உத்தர பிரதேசம், நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைந்துள்ளது.
அங்கு டேக்கேர் எனப்படும் குழந்தைகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. தனியார் சார்பில் நடத்தப்படும் மையத்தில் 15 மாத பெண் குழந்தையை, பெற்றோர் விட்டுச் சென்றுள்ளனர். அந்த குழந்தையின் உடலில் திடீரென தழும்புகள் தென்பட்டுள்ளன.
குழந்தை காயம்
உடனே மருத்துவமனையில் சோதித்ததில், கிள்ளி வைத்து, கடித்ததால் ஏற்பட்ட காயம் எனக் கூறியுள்ளனர். தொடர்ந்து மையத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது,
தொடர்ந்து குழந்தை அழுததால் ஆத்திரமடைந்த பெண், பிளாஸ்டிக் பேட்டை எடுத்து தலையிலும், நெற்றியிலும் அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் குழந்தை மேலும் கதறி அழுதுள்ளது. இதனால் குழந்தையை கிள்ளியும், கடித்தும் காயப்படுத்தியுள்ளார்.
பின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.