இனி தெரியாத கல்யாணத்திற்கு கூட போகலாம் - ட்ரெண்டாகும் ‘JOIN MY WEDDING’
"JOIN MY WEDDING" எனும் புதிய ட்ரெண்டிங் வைரலாகி வருகிறது.
JOIN MY WEDDING
இந்தியர்கள், தங்கள் வீட்டுத் திருமணங்களை ஒரு வியாபார வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றனர். நீங்கள் பணம் கட்டுனா போதும், இனி யார் கல்யாணத்துக்கு வேணும்னாலும் போகலாம்.
தங்கள் திருமணத்தில் கலந்துக்கொள்ள விரும்பும் வெளிநாட்டுப் பயணிகளை அழைக்கிறாங்க. வெளிநாட்டுக்காரங்க ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, இந்தத் திருமணத்தில் விருந்தினர்களாக கலந்துக்கொள்கிறார்கள்.
என்ன செய்கிறார்கள்?
அதன்படி, மெஹந்தி, சங்கீத் போன்ற கொண்டாட்டங்களில் இருந்து கல்யாண சடங்குகள் வரை அனைத்திலும் ஆர்வமாக பங்கெடுக்கிறார்கள்.
இந்திய கலாசாரத்தை, குறிப்பா நம்ம விருந்தோம்பலை, உலகத்துக்கு நேரடியா கொண்டு போறதுக்கான ஒரு வாய்ப்பாக இந்த நடைமுறை பார்க்கப்படுகிறது.
மேலும், கல்யாணச் செலவுகள் ரொம்ப அதிகமா இருக்கிற நிலையில், ஜாயின் மை வெட்டிங் கான்செப்ட் மூலம் வருகிற வருமானம் பலருக்கும் கைகொடுப்பதாக கூறுகின்றனர்.