1 மணி வரை தான் New Year கொண்டாட்டம் - அரசு அதிரடி!

COVID-19 Karnataka
By Sumathi Dec 27, 2022 08:22 AM GMT
Report

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசத்தை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது.

கொரோனா

கொரோனாவின் ஆட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், பல நாடுகளும் மீண்டும் தங்களின் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. விமான நிலையங்களில் பரிசோதனைகள் தொடங்கிவிட்டன. இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது பற்றி விவாதிக்க,

1 மணி வரை தான் New Year கொண்டாட்டம் - அரசு அதிரடி! | Karnataka Ordered Mask Mandatory In Public Places

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதன் பிறகு, கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர். அசோகா கூறுகையில், ``சினிமா தியேட்டர்களிலும், புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக

முகக்கவசம்  கட்டாயம்

பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. குறிப்பாக எம்.ஜி ரோடு, பிரிகேட் ரோடு மற்றும் பெங்களூரூவின் மற்ற கொண்டாட்டங்கள் நிறைந்த பகுதிகளிலும் மக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது பார்கள், பப்கள், ரெஸ்டாரன்ட்கள் இருக்கைகளுக்கு ஏற்றவாறே செயல்பட வேண்டும். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் ஜனவரி 1-ம் தேதி இரவு 1 மணியுடன் முடிவுக்கு வரும்.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிய வேண்டும். வகுப்பறையிலும் முகக்கவசம் அணிய வேண்டும். விமான நிலையத்தில் வந்திறங்கும் சர்வதேச பயணிகளிடம் பரிசோதனைகள் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.