தனது முகக்கவசத்தை கழட்டி கால் கட்டை விரலில் தொங்கவிட்ட அமைச்சர் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

tamilnadu-politics-samugam
By Nandhini Jul 16, 2021 07:46 AM GMT
Report

உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர் காலில் மாஸ்க் அணிந்தபடி இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி பரவி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்து பலர் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. நடப்பு சட்டமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நிறைவடை உள்ளது. இந்நிலையில், உட்கட்சியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரண்டு முறை முதலமைச்சர் மாற்றம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, சமீபத்தில் புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில், அமைச்சர்கள் சுவாமி யதிஷ்வாரானந்த், பிஷன் சிங் சுபால், சுபோத் உனியால் ஆகியோர் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலந்து கொண்டார்கள். அப்போது, அமைச்சர் யதிஷ்வாரானந்த் தனது முகக்கவசத்தை கழட்டி கால் கட்டை விரலில் தொங்கவிட்டிருந்தார்.

இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புகைப்படத்தைப் பார்த்த பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கொரோனா 3வது அலைக்கு எதிராகவும், டெல்டா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்கவும் முகக்கவசத்தை இப்படித்தான் அணிய வேண்டும் என்று சிலர் கிண்டலாக பதிவிட்டிருக்கிறார்கள். மேலும் முகக்கவசத்தை தொங்க விடுவதற்கு மிக மிக சுத்தமான இடத்தை அமைச்சர் யதிஷ்வாரானந்த் கண்டுபிடித்துள்ளார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.