நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்; சிறுமியின் தலையோடு தலைமறைவு - இளைஞர் வெறிச்செயல்!

Karnataka Death
By Swetha May 11, 2024 07:12 PM GMT
Report

குழந்தை திருமணம் நிறுத்தப்பட்டதால் இளைஞர் ஒருவர் சிறுமியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

குழந்தை திருமணம் 

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லப்பி கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி(32). இவரது மகள் மீனா (16) பொதுத்தேர்வு எழுதி முடிவுகள் வெளியான நிலையில் அதில் மீனா தேர்ச்சி பெற்றிருந்தார். இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர்கள் பிரகாஷ் (32) என்ற நபருடன் திருமண ஏற்பாடுகள் செய்தனர்.

நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்; சிறுமியின் தலையோடு தலைமறைவு - இளைஞர் வெறிச்செயல்! | Karnataka Man Chops Off Teen Fiancees Head

இதையறிந்து, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், சிறுமியின் வீட்டிற்கு சென்றனர்.மீனா மைனர் என்பதால் திருமண ஏற்பாடுகள் செய்யக்கூடாது என்றும், 18 வயது பூர்த்தியான பின்னர் சிறுமிக்கு திருமணம் செய்துவைக்கும்படியும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதிகாரிகளின் பேச்சை ஏற்றுக்கொண்ட சிறுமியின் பெற்றோர், திருமண நிச்சயதார்த்தத்தை நிறுத்தினர். திருமண நிச்சயதார்த்தம் நின்றுபோனதால் ஆத்திரமடைந்த பிரகாஷ், சிறுமியின் பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் வாக்கு வாதம் முற்றியது.

குழந்தை திருமணம் : சிதம்பரம் தீட்சிதர்கள் கைது

குழந்தை திருமணம் : சிதம்பரம் தீட்சிதர்கள் கைது

வெறிச்செயல்

அப்போது கோபத்தின் உச்சிக்கு சென்ற பிரகாஷ், சிறுமியின் பெற்றோரை தாக்கிவிட்டு, சிறுமியை வீட்டில் இருந்து இழுத்து சென்று அரிவாளால் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். பின்னர், தலையை எடுத்து கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடினார்.

நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்; சிறுமியின் தலையோடு தலைமறைவு - இளைஞர் வெறிச்செயல்! | Karnataka Man Chops Off Teen Fiancees Head

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரகாஷ் தாக்கியதில் காயமடைந்த சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படி ஒரு வெறிச்செயலை செய்துவிட்டு தப்பியோடிய பிரகாஷை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறுமியின் திருமண ஏற்பாடுகள் நின்றுபோன சந்தோஷத்தில் உலாவிய அடுத்த சில நேரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.