இந்தியாவில் அதிகரிக்கும் HMPV வைரஸ்; மாஸ்க் அணிவது கட்டாயம் - அரசு முக்கிய உத்தரவு
கூட்டமான பகுதிகளுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் என கர்நாடக மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
HMPV தொற்று
சீனாவில் பரவி வரும் ஹூமன் மெட்டாப்நீயூமோவைரஸ் (HMPV) தொற்று உலகம் முழுவதும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது சாதாரணமாக குளிர்காலத்தில் பரவும் தொற்றுதான் என கூறப்பட்டாலும், சீன மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறதாக கூறப்படுகிறது.
மாஸ்க் கட்டாயம்
இந்நிலையில் இந்தியாவிலும் இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இரு குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள ஒரு குழந்தைக்கும் HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
HMPV தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ள நிலையில், நிலைமைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், இது குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அனைவரும் கூட்டமான பகுதிகளுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என கர்நாடக மாநில அரசு அறிவுறுத்தியுள்ளதுள்ளது.