சீனாவை மிரட்டும் HMPV வைரஸ் - இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு தொற்று உறுதி
இந்தியாவில் இரு குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
HMPV வைரஸ்
சீனாவில் பரவி வரும் ஹூமன் மெட்டாப்நீயூமோவைரஸ் (HMPV) தொற்று உலகம் முழுவதும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நோய் தொற்று காரணமாக சீனாவில் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதி வரும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்தியாவில் பாதிப்பு
இது சாதாரண மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் என்று சீன சுகாதார துறை அதிகாரிகள், உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த HMPV நோய் தோற்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இரு குழந்தைகளுக்கு கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
பெங்களுருவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 மாத பெண் குழந்தைக்கு HMPV இருப்பது கண்டறியப்பட்டது. அந்த குழந்தை குணமடைந்துள்ள நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு தொடர்பு
மேலும், ஜனவரி 3, 2025 அன்று, பெங்களுருவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் முன்னதாக மூச்சுக்குழாய் நிமோனியா பாதிப்பு கொண்ட 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV சோதனையில் பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தை குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது.
HMPV தொற்றால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளும், எந்த வித வெளிநாடு தொடர்பு இல்லாத நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது வழக்கமாக குளிர்காலத்தில் ஏற்படும் பாதிப்பு தான் என கூறி வந்தாலும் நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரபடுத்த சுகாதாரதுறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.