பயணிகளின் கவனத்திற்கு; இனி பைக் டாக்சிகள் ஓட தடை - மாநில அரசு அதிரடி உத்தரவு!

Karnataka Bengaluru
By Swetha Mar 09, 2024 03:24 AM GMT
Report

பைக் டாக்சி சேவைக்கு கர்நாடக அரசு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பைக் டாக்சி

கர்நாடக மாநிலம்,பெங்களுருவில் ரெப்பிட்டோ, ஊபர் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பைக் டாக்ஸி சேவை வழங்கி வருகின்றன. இந்த சேவையானது சுலபமாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பயணிகளின் கவனத்திற்கு; இனி பைக் டாக்சிகள் ஓட தடை - மாநில அரசு அதிரடி உத்தரவு! | Karnataka Government Banned Bike Taxi Ride

முன்பு இருந்த பா.ஜனதா அரசு, கடந்த 2021-ம் ஆண்டு இதற்கு அனுமதி வழங்கிய நிலையில், ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தங்களின் வருவாய் பாதிப்பு அடைவதாக கூறி அவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.

இதையடுத்து, கர்நாடக மாநில அரசு இதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்டோ டிரைவர்களுக்கு உறுதியளித்து இருந்தது.

ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை - காவல்துறை அதிரடி

ரேபிடோ பைக் டாக்ஸி சேவைக்கு தடை - காவல்துறை அதிரடி

அரசு உத்தரவு

கடந்த ஆண்டுக்கு முன்பு பெங்களூருவில் பைக் டாக்ஸியில் பயணித்த பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பயணிகளின் கவனத்திற்கு; இனி பைக் டாக்சிகள் ஓட தடை - மாநில அரசு அதிரடி உத்தரவு! | Karnataka Government Banned Bike Taxi Ride

மேலும், பைக் டாக்ஸி பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்ட மாநில அரசின் போக்குவரத்து துறை, கர்நாடகத்தில் பைக் டாக்சிக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கர்நாடக தனியார் போக்குவரத்து சங்கங்களின் தலைவர் நடராஜ் சர்மா, 'கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மின்சார பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்கியது. ஆனால் வெள்ளை பதிவெண் பலகை கொண்ட இரு சக்கர வாகனங்களும் பைக் டாக்சிகளாக பயன்படுத்தப்பட்டது. இது விதிமுறைகளுக்கு எதிரானது. இதை ரத்து செசெய்ய கோரி நாங்கள் தீவிரமாக போராடினோம். இந்த நிலையில் பைக் டாக்சியை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன்' என்று கூறியுள்ளார்.