அண்ணாமலை வருகையே பாஜக பின்னடைவுக்கு காரணம் - சசிகாந்த் செந்தில் பரபர தகவல்
அண்ணாமலை வருகை பாஜகவை வலுவிழக்கவே செய்ததாக செந்தில் தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தல்
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெற்றதன் பின்னணியில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலின் பெரும் பங்கு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்காக சமூக வலைதள பிரச்சாரம், ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது, விளம்பரம் கொடுப்பது, நவீன வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற பணிகளை மிக சிறப்பாக செய்ததனால் தான் மிக பெரிய வெற்றியை காண முடிந்ததாக கூறப்படுகிறது.
சசிகாந்த் செந்தில்
குறிப்பாக ‘PayCM’ ‘PayMLA’போஸ்டர்கள் கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனத்தை ஈர்த்தது. அதே சமயம், பாஜகவின் தேர்தல் பணிகளை கவனிக்க இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், செந்தில் கர்நாடகாவில் அண்ணாமலையின் வருகை பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவாகவே இருந்ததாக தெரிவித்துள்ளார்.