பி.டி.ஆர்-க்கு துறையை மாற்றியிருக்கவே கூடாது - அண்ணாமலை ஆவேசம்!

Tamil nadu K. Annamalai Palanivel Thiagarajan
By Vinothini May 12, 2023 01:30 PM GMT
Report

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து மாற்றியது ஏற்கமுடியாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம்

தமிழக அமைச்சரவை தற்போது மாற்றப்பட்டது, இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார்.

anamalai-speaks-about-ministry-shuffle

அப்போது அவர், "ஆவடி நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு பாஜக வரவேற்பு அளிப்பதாகவும், கடந்த பிப்ரவரி மாதம் பாலில் உள்ள பச்சை நிற பாக்கெட்டில் பாலின் கொழுப்பு அளவை குறைத்துள்ளதால் நாசர் மாற்றப்பட்டதற்கு வரவேற்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், டி.ஆர். பி.ராஜா குடும்பம் அனைத்து துறை தொழில் செய்துவருகிறார்கள். முதல்வர் எதன் அடிப்படையில் தொழிற் துறையை அவருக்கு கொடுத்தார்கள். டிஆர்பி ராஜா சாராய ஆலை வைத்துள்ளனர்.

அவரால் தொழில்துறையில் திறம்பட பணியாற்ற முடியுமா? இதன் மூலம் திமுக அரசில் சாராய உற்பத்தி, விற்பனை அனைத்தையும் தங்கள் கையில் வைத்திருக்க நினைக்கின்றனர்.டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது நகைப்பிற்குரியது" என்று கூறினார்.

விமர்சனம்

இதனை தொடர்ந்து, அவர் "அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியவர். பல ஊழல்களை செய்தவர் டிஆர்.பாலு. மேலும் அதிகமாக அவர் மீது குற்றங்களை முன் வைப்பேன்" என கூறினார்.

anamalai-speaks-about-ministry-shuffle

தொடர்ந்து பேசிய அவர், "பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து மாற்றியது ஏற்புடையதல்ல.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயலாற்றுகிறார் என கூறிய முதலமைச்சர் இப்போது மாற்றுவதற்கு காரணம் என்ன? பிடிஆர் திராவிட மாடல் அரசின் பிராண்ட் அம்பாசடராக இருந்த அவரை மாற்ற காரணம் என்ன? ஆடியோ பிரச்சனைக்காக அவரை மாற்றியது ஏற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.