முதலமைச்சருக்கு 200 கோடி லஞ்சம் : அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திதார் அப்போது பேசிய அவர்
நான் திமுகவுக்கு சவால் வைத்தேன். என் பில் மட்டும் இல்ல. திமுக ஊழலையும் வெளியிடுகிறேன். நான் கேள்வி கேட்கும் நேரம் இது.எனவே ஒரு வாரம் கழித்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகிறேன். இப்போது நான் கேள்விகளை எழுப்பும் நேரம் நான் பட்டியலை வெளியிட்ட பின்னர் நீங்கள் அதனை முழுமையாக ஆராய்ச்சி செய்துவிட்டு பின்னர் கேளுங்கள் என கூறினார்.
இந்தியாவில் உள்ள 2 ரபேல் வாட்ச்சில் ஒன்று என்னிடம் உள்ளது. விலையை தாண்டி சிறப்புக்காக தான் இந்த வாட்ச் வைத்துள்ளேன். பெல் அண்ட் ரோஸ் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்டது 147 எடிசன் வாட்ச். ஜிம்சன் கோவை நிறுவனத்தில் வாட்ச் வாங்கினேன். சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் தான் ஒரிஜினல் ஓனர்.
அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்துக்கு இந்த வாட்சை வாங்கினேன். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நேரடியாக 200கோடி ரூபாய் இந்தோ யூரோப்பியன் நிறுவனம் கொடுத்துள்ளது. சிபிஐக்கு நான் வழங்க போறேன்.
2011ல், தேர்தல் நிதியாக வந்துள்ளது, மத்திய அரசின் பங்களிப்பு வருவதால் சி.பி. ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் கொடுக்கப்படும் என கூறினார். இந்திய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக என் மொத்த வருமான செலவையும் வெளியிடுகிறேன்.
அனைத்து கட்சியின் ஊழல் பட்டியலையும் வெளியிட உள்ளேன் அதில் மாற்றம் இல்லை. வேண்டும் என்றால் என்னை மாற்ற சொல்லுங்கள்
முகவினர் சொத்து பட்டியலையும் சென்னையில் வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதன்படி, திமுக குடும்பத்தினர் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்களது சொத்து பட்டியலை வெளியிட்டார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. இந்த சொத்து பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், செந்தில் பாலாஜி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் டி ஆர் பாலு என பல பெயர் இடம் பெற்றுள்ளது
அண்ணாமலை கூறுகையில், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலும் 2024-க்குள் வெளியிடப்படும். அதிமுக பெயரை குறிப்பிடாமல் இதனை கூறியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்க்க நான் தயார் என்றும் ஊழல் பட்டியலை part-4 வரை வெளியிடுவேன் எனவும் தெரிவித்தார்.
என் மண், என் மக்கள் என்ற பெயரில் ஊழலை எதிர்த்து ஜூலையில் பாதயாத்திரை நடத்தப்படும் எனவும் அறிவித்தார்