காங்கிரஸை நம்ப மக்கள் ரெடியா இல்லை - நிர்மலா சீதாராமன் உறுதி
காங்கிரஸை நம்ப மக்கள் தயாராக இல்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தேர்தல்
கர்நாடகா மாநிலம் முழுவதும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர்.

பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்ப்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவும் நிலையில் ஆம்ஆத்மி, தேதியவாத காங்கிரஸ் மற்றும் ஒவைசியின் AIMIM கட்சிகளும் சில தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
நிர்மலா சீதாராமன்
இந்நிலையில், பெங்களூரு ஜெய்நகரில் வரிசையில் காத்திருந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார். மேலும், வாக்கு என்பது மக்களின் அதிகாரம், எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்து வெளியே வந்து வாக்களிக்க வேண்டும்.
காங்கிரஸ் இதற்கு முன்பு கொடுத்த எல்லா இலவச திட்டங்களையும் நிறைவேற்றியிருந்தால் மக்கள் அவர்களை நம்பியிருப்பார்கள், அவர்கள் இதுவரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மக்கள் அவர்களை நம்ம தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.