வெட்டுக்காயத்திற்கு பெவிக்குய்க் தடவி ஒட்டிய மருத்துவர் - தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!
தெலுங்கானாவில் தலையில் அடிபட்ட சிறுவனுக்கு தைய்யல் போடாமல் பெவிக்குய்க் வைத்து மருத்துவர் செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா
கர்நாடகா மாநிலம், லிங்கசூகூரைச் சேர்ந்த வம்சி கிருஷ்ணா, இவரது 7 வயது மகன் மற்றும் மனைவியுடன் தெலங்கானா மாநிலத்தில் உள்ள அய்சாவுக்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுவன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கீழே விழுந்து தலையில் அடிபட்டுள்ளது. உடனடியாக வம்சி தன் மகனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவர் செய்த காரியம்
இந்நிலையில், அங்கு இருந்த மருத்துவர் அடிபட்ட தலையில் தையல் போடுவதை விட்டு விட்டு, உடைந்த பொருட்களை ஒட்டப் பயன்படும் பெவிக்குய்க்கை தடவியுள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்யதனர். அப்பொழுது அங்குள்ள நிர்வாகம் அலட்சியமாக பதிலளித்துள்ளது.
தொடர்ந்து, அவர்கள் போலீசில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில், அங்குள்ள மருத்துவர் மற்றும் உதவியாளர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
மேலும், சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த தனியார் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். தற்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.