அதிகரிக்கும் கொரோனா..தெலுங்கானாவில் நாளை முதல் ஊரடங்கு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தெலுங்கானாவில் நாளை முதல் 10 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. காலை 6:00 முதல் 10: 00 மணி வரை தளர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்:
தெலுங்கானாவில் நாளை காலை 10 மணி முதல் ஊரடங்கை அமல்படுத்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பொது மக்கள் பொருட்களை வாங்குவதற்காக காலை 6: 00 மணி முதல் 10:00 மணி வரை தளர்வு அளிக்கப்படும். தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கு சர்வதேச அளவில் டெண்டர் விட அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளதாக. அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும், ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புஎண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்14 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கூறியது.
ஆனால், மாநிலத்தின் பொருளாதாரத்தை காரணம் காட்டி, ஊரடங்கு அமல்படுத்த முடியாது என முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.