அலுவலகத்தில் பெண்களுடன் நெருக்கம் - நடிகையின் வளர்ப்பு தந்தை டிஜிபி செயல்
டிஜிபி தனது அலுவலகத்தில் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சை வெடித்துள்ளது.
பெண்ணுடன் நெருக்கம்
கர்நாடகா மாநிலத்தில் டிஜிபியாக இருப்பவர் கே.ராமச்சந்திர ராவ். குடியுரிமை அமலாக்கப்பிரிவில் அதிகாரியாக இருக்கும் ராமச்சந்திர ராவ்,

தனது அலுவலகத்தில் பெண்களுடன் ஆபாசமாக நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி இருக்கிறது. தொடர்ந்து இது குறித்து முழுமையாக விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ராமச்சந்திர ராவ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ராமச்சந்திர ராவ் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சஸ்பெண்ட் காலத்தில் ராமச்சந்திர ராவ் போலீஸ் தலைமை அலுவலகத்தை விட்டு எங்கேயும் செல்லக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபி சஸ்பெண்ட்
டிஜிபி ராமச்சந்திர ராவ் நடிகை ரம்யா ராவ் வளர்ப்பு தந்தையாவார். கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்ததாக ரன்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார்.
இதையடுத்து ரன்யா ராவ் தனக்கு தெரிந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மூலம் தனது மகள் ரன்யா ராவை காப்பாற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு ரன்யா ராவ் பிடிபடுவதற்கு முன்பு ரன்யா ராவ் பல முறை தங்கம் கடத்தி வந்துள்ளார்.
அப்போதெல்லாம் பாதுகாப்பு சோதனையில் இருந்து தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் மகள் ரன்யா ராவை ராமச்சந்திர ராவ் காப்பாற்றியதாக கூறப்பட்டது. ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போது ராமச்சந்திர ராவ் பணியில் இருந்து கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.