லிவ்இன் பார்ட்னர் கொலை - துண்டாக வெட்டி பெட்டியில் அடைத்த கொடூரம்
லிவ் இன் பார்ட்னரை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி பெட்டியில் போட்டு எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
லிவ் இன்
உத்தரப்பிரதேசம், ஜான்சியில் ஒரு நீல நிறப் பெட்டியை ஏற்றிச் செல்ல வேண்டும் என மர்மநபர் ஒருவர் லோடு ஆட்டோ டிரைவரை புக் செய்துள்ளார்.

அங்கிருந்து மினெர்வா பகுதிக்கு கொண்டுவந்து இறக்கி வைக்குமாறு அந்த நபர் டிரைவரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநருக்கு பெட்டியிலிருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே விரைந்து வந்த போலீஸார் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் உடல் எரிக்கப்பட்டு துண்டுதுண்டாக கிடந்துள்ளது. தொடர் விசாரணையில், பிரித்தி என்ற 32 வயது பெண்ணும், ராம் சிங் என்கிற 62 வயது நபரும் வசித்து வந்துள்ளனர்.
முதியவர் கொடூரம்
ராம்சிங் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்து, இரண்டாவது மனைவியுடன் கோட்வாலிக்கு அருகே வசித்து வருகிறார். 3வதாக பிரீத்திக்கு வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்து லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும், பிரீத்தி ராம்சிங்கிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரத்தில் ராம்சிங் பிரீத்தியை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டிப்போட்டு எரித்து பெட்டியில் போட்டு தண்ணீரை
ஊற்றி நிரப்பி வேறு எங்காவது கொண்டுசென்று டிஸ்போஸ் செய்துவிடலாம் என்று ஆட்டோவில் ஏற்றியது தெரியவந்தது. இதனையடுத்து தற்போது ராம்சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.