அன்போடு வந்த தொண்டரை ஓங்கி அறைந்த துணை முதல்வர் - VIRAL VIDEO!
செல்பி எடுப்பதற்காக வந்த தொண்டரை கர்நாடக துணை முதல்வர் ஓங்கி அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தொண்டர்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதற்கான தீவிர பரபரப்புரையில் பல அரசியல் கட்சிகளும் முக்கிய தலைவர்களும் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தார்வாட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினோதா அசூட்டிக்கு ஆதரவாக வாக்கு சேகரிதார்.
அப்போது ஹாவேரி சவனூர் நகரில் பிரசார பேரணியில் கலந்துகொள்ள இருந்து அவர் காரில் இருந்து இறங்கியபோது காங்கிரஸ் தொண்டர்கள் அவரை சூழ்ந்து வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த நகராட்சி உறுப்பினரும், காங்கிரஸ் தொண்டருமான அல்லாவுதீன் மணியார் என்பவர் ஆர்வத்தில் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருடன் செல்பி எடுப்பதற்காக அவரது தோள்களில் கைகளை வைக்க முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் அந்த தொண்டரை ஓங்கி பளார் என அறைந்தார்.
துணை முதல்வர்
இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அல்லாவுதீன் மணியாரை கூட்டத்தில் இருந்து தரதரவென இழுத்தி ஒதுக்கினர். பிறகு, டி.கே.சிவகுமாரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த காட்சி விடியோவாக பதிவானதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இது குறித்து பா.ஜனதா ஐ.டி.விங் தலைவர் அமித் மாளவியா எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அதில், டி.கே.சிவகுமார் ஒருவரை தாக்குவது இது முதல் முறையல்ல. டி.கே.சிவகுமாரின் தோளில் கை வைத்தது காங்கிரஸ் மாநகர உறுப்பினர் செய்த குற்றமா?
காங்கிரஸ்காரர்கள் ஏன் காங்கிரசுக்கு வேலை செய்ய விரும்புகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? அவர்களின் தலைவர்கள் அவர்களை அறைகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். போட்டியிட டிக்கெட் கொடுக்கவில்லை, ஒதுக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்கத்தில் சுயமரியாதை இல்லையா? என்று குறிப்பிட்டுளளார்.