குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பிரிந்த தம்பதி.. நீதிமன்றம் செய்த செயல் - இறுதியில் ட்விஸ்ட்!

Karnataka India World
By Swetha Dec 18, 2024 03:15 PM GMT
Report

குழந்தைக்குப் பெயர் சூட்டி தம்பதியின் பிரச்சனையை நீதிமன்றம் தீர்த்து வைத்தது அரங்கேறியுள்ளது.

 தம்பதி.. 

கர்நாடக மாநிலம் ஹன்சூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 14ம் தேதி இரு விநோத வழக்கு விசாரனைக்கு வந்தது. அதில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பிரிந்த தம்பதி.. நீதிமன்றம் செய்த செயல் - இறுதியில் ட்விஸ்ட்! | Karnataka Court Picks And Gives A Name To Child

ஆனால் அப்போது இருந்து தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது பிறந்த அந்த ஆண் குழந்தையை தாய் ‘ஆதி’ என அழைத்து வந்துள்ளார். அதனை தந்தை ஒப்புக்கொள்ளாமல் குழந்தைக்கு ‘ஷனி’ என பெயர் சூட்ட விரும்பியிருக்கிறார்.

விழுப்புரம் அருகே சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - உயிருடன் மீட்பு!

விழுப்புரம் அருகே சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை - உயிருடன் மீட்பு!

குழந்தை

இது தாய்க்கு பிடிக்கவில்லை. இதனால் பெயர் சூட்டுவதில் இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். குழந்தைக்கு பெயரும் வைக்கவில்லை. இந்த நிலையில், குழந்தையின் தாய் நீதிமன்றத் வழக்கு தொடர்ந்தார்.

குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் பிரிந்த தம்பதி.. நீதிமன்றம் செய்த செயல் - இறுதியில் ட்விஸ்ட்! | Karnataka Court Picks And Gives A Name To Child

நீதிமன்றம் தரப்பில் பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அனைத்தையும் தம்பது நிராகரித்த நிலையில், ‘ஆர்யவர்தனா’ என்ற பெயரைச் சூட்ட இருவரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி, நீதிமன்றமே குழந்தைக்குப் பெயர் சூட்டியது.

இந்தப் பெயரை பெற்றோரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இறுதியில், நடந்த ட்விஸ்ட் என்னவென்றார் குழந்தை பிறந்தது முதலே பிரிந்து வாழ்ந்துவந்த அந்தத் தம்பதி, நீதிமன்றத்தில் மீண்டும் மாலை மாற்றி, பிள்ளைக்காக ஒற்றுமையாக வாழ்வதற்கும் நீதிபதிகள் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளனர்.