பெண்களுக்கு மாதம் ரூ.2000, இலவச பயணம் - அறிவிப்புகளில் அசத்தும் காங்கிரஸ்

Indian National Congress Karnataka
By Sumathi May 02, 2023 07:27 AM GMT
Report

அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.2000 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

தேர்தல் 

கர்நாடகாவில் வரும் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

பெண்களுக்கு மாதம் ரூ.2000, இலவச பயணம் - அறிவிப்புகளில் அசத்தும் காங்கிரஸ் | Karnataka Congress Provide 2000 Rs For All Ladies

அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்; அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அசத்தும் காங்கிரஸ்

மேலும், வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம், வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ3,000 நிதி உதவி,

விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் ஏராளமான வாக்குறுதிகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.