சட்டையை கழற்றனுமா?அதும் சிலர்.. வெளியவே நின்று சாமி கும்பிட்ட சித்தராமையா - கொந்தளிப்பு!
கோவிலில் தரிசனம் செய்த சம்பவம் குறித்த தகவல் ஒன்றை சித்தராமையா பகிர்ந்துள்ளார்.
சித்தராமையா
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; ஒழிக்க வேண்டிய விஷயம் எனத் தெரிவித்திருந்தார்.
இந்து மதத்தையும், இந்துக்களையும் அழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறுவதாக பாஜகவினர் புகார் கூறி வருகின்றனர். மேலும் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகாரளிக்கப்பட்டுள்ளது. தான் சனாதனம் பற்றி தான் பேசியதாகவும்,
அனைவரும் சமம்
இன அழிப்பு குறித்து ஒரு வார்த்தை கூட கூறவில்லை எனவும் உதயநிதி குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்நிலையில், கர்நாடகா முதல்வர் சித்தராமையா சமூக சீர்த்திருத்தவாதியான நாராயண குருவின் 169வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நான் ஒரு முறை கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றேன்.
அப்போது அங்கு எனது சட்டையை கழற்றிவிட்டு கோவிலுக்குள் செல்லும்படி கூறினார்கள். அப்போது நான் கோவிலுக்கு செல்வதை தவிர்த்துவிட்டு வெளியே நின்றே சாமி கும்பிட்டுவிட்டு வந்தேன். அவர்கள் கோவிலுக்கு வரும் அனைவரையும் சட்டையை கழற்றும்படி கூறுவது இல்லை. சில பேரை மட்டுமே அப்படி வரும்படி கூறுகின்றனர்.
இது மனிதாபிமானத்துக்கு எதிரான நடைமுறை. ஏனென்றால் கடவுள் முன்பு அனைவரும் சமம் எனத் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.