₹4,000 கோடி..மனைவிக்கு மாற்று நிலம் - முறைகேடில் ஈடுபட்டாரா சித்தராமையா?
கர்நாடக ஆளுநர் மூலம் காங்கிரஸ் அரசுக்கு பாஜக தொந்தரவு கொடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார் .
சித்தராமையா
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடாக அவருக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. அப்போது கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, இழப்பீடாக கொடுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது .
இதனால் அரசு ₹4,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர் கட்சிகள் குற்றம்சாட்டினர். மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ,ஆளுநர் தாவர்சந்த் கெலாட் உள்ளிட்டோர் முறைகேடில் ஈடுபட்டதாக கூறி மைசூருவில் உள்ள விஜயநகர் காவல் நிலையத்தில் செய்யப்பட்டது .
முறைகேடு
இந்த விவகாரம் குறித்து முதல்வர் சித்தராமையா கூறியதாவது: எனது 40 ஆண்டு அரசியல் வாழ்வில் இதுவரை எந்த முறைகேட்டிலும் நான் ஈடுபட்டதில்லை. எனது பதவியை வைத்து எந்த ஊழலும் செய்ததில்லை.ஆனால் பாஜகவும், மஜதவும் சேர்ந்துகொண்டு என்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
என் மனைவிக்கு இழப்பீடாக கொடுக்கப்பட்ட நில விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோதும் ஆளுநர் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த விவகாரத்தின் பின்னணியில் பாஜக இருக்கிறது என்று குற்றம்சாட்டினார்.