கர்நாடகா அமைச்சரவை பட்டியல் வெளியீடு - 24 அமைச்சர்கள் பதவியேற்பு!

Indian National Congress Karnataka
By Vinothini May 27, 2023 06:38 AM GMT
Report

கர்நாடகா தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியில் இன்று பதவியேற்கப்போகும் 24 மந்திரிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ்

கர்நாடகா மாநிலத்தில், சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

karnataka-cabinet-ministers-list

இதனை தொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டிகே சிவக்குமாரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

அப்போது 8 பேர் மந்திரிகளாக பொறுப்பேற்றுக்கொண்டனர். மேலும், அமைச்சரவையை விரிவாக்க வேண்டும் என்று ஆலோசனை நடந்து வந்தது.

அமைச்சர்கள்

இந்நிலையில், இன்று கர்நாடகா புதிய காங்கிரஸின் அமைச்சரவையில் புதிதாக 24 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர்.

karnataka-cabinet-ministers-list

தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

மேலும், மகாதேவப்பா, எச்.கே.பாட்டீல், மது பங்காரப்பா, உள்ளிட்டோரும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் உள்ள 24 பேரும் இன்று காலை 11.45 மணியளவில் கவர்னர் மாளிகையில் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர்.