அரசு பஸ் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு!

Indian National Congress BJP Karnataka
By Sumathi Jan 03, 2025 05:26 AM GMT
Report

 பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுகிறது.

கட்டணம் உயர்வு

கர்நாடகாவில் மாநில சாலை போக்குவரத்து கழகம் (KSRTC), கல்யாண் கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம் (KKRTC), வடமேற்கு கர்நாடகா சாலை போக்குவரத்து கழகம் (NWKRTC), பெங்களூரு மாநகரப் போக்குவரத்து கழகம் (BMTC) ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

karnataka buses

இவற்றில் 1.2 கோடி பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த 4 போக்குவரத்து கழகங்களிலும் பேருந்து டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பஸ் ஸ்லீப்பரில் மூட்டை பூச்சியால் நடந்த சம்பவம் - தம்பதிக்கு ரூ.1.29 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

பஸ் ஸ்லீப்பரில் மூட்டை பூச்சியால் நடந்த சம்பவம் - தம்பதிக்கு ரூ.1.29 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

அரசு அறிவிப்பு

அதன்படி, அனைத்து அரசு பேருந்துகளிலும் 15 சதவீதம் டிக்கெட் கட்டணம் அதிகரிக்கிறது. இது வரும் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பள உயர்வு, டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு உள்ளிட்டவை காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பஸ் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு - வெளியான முக்கிய அறிவிப்பு! | Karnataka Bus Fares To Increase Bjp Slams

அங்கு ஏற்கனவே மகளிருக்கு இலவச பேருந்து பயணம் நடைமுறையில் இருக்கிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு 1.5 ஆண்டுகள் ஆகிறது. இந்த அறிவிப்புக்கு அங்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.