பாஜக எம்பி காலமானார் - விடுமுறை அறிவித்த அரசு!
எம்பி மறைவுக்கு அரசு ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளது.
எம்பி மறைவு
கர்நாடகா, சாம்ராஜ் நகர் தொகுதி பாஜக எம்பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் வி.ஸ்ரீநிவாஸ் பிரசாத் (76). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 50 ஆண்டு கால அரசியல் பயணத்திலிருந்து கடந்த மார்ச் 17-ம் தேதி தனது ஓய்வை அறிவித்தார்.
விடுமுறை
1980-ம் ஆண்டில் ஜனதா கட்சி உறுப்பினராக தனது மக்களவை பயணத்தைத் தொடங்கிய அவர், காங்கிரஸிலும், பின்னர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலும் இருந்தார். பின்னர் மீண்டும் காங்கிரஸுக்குத் திரும்பினார். 2016ம் ஆண்டில், சித்தராமையா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்தார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, மைசூரு மற்றும் சாமராஜ்நகர் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மேலும், அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.