கர்நாடகாவில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை நீக்கம் - முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு..!
கர்நாடகா பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஹிஜாப் விவகாரம்
கர்நாடகாவில் கடந்த கால பாஜக ஆட்சியின் போது பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எனும் இஸ்லாமிய உடை அணிய தடை விதிக்கப்பட்டது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.
இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று, கர்நாடக முதல்வராக பதவியில் இருக்கும் சித்தராமையா ,ஹிஜாப் குறித்த முக்கிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தடை நீக்கம்
அதாவது , பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இந்த உத்தரவு அனைத்து பள்ளிகளுக்கும் சென்ற பிறகு பள்ளிகளில் ஹிஜாப் அணிய இஸ்லாமிய மாணவிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என கூறப்படுகிறது.