சரமாரியாக எகிறிய பீர் விலை - மது பிரியர்கள் ஏமாற்றம்!
பீர் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
பீர் விலை
கர்நாடகாவில் பீர் பாட்டில் விற்பனையில் லிட்டருக்கு 185 சதவீதமாக இருந்த கலால் வரியானது தற்போது 195 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 100 ரூபாய் கொண்ட பீர் பாட்டில் விலை தற்போது 145 ரூபாயாகவும், 230 ரூபாய் கொண்ட பீர் பாட்டில் விலை 240 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு கடந்த 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
விற்பனை சரிவு
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் விற்பனை 10 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வால் கடந்த ஒரு வார காலமாக பீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் சந்தையில் பீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தற்போது பார்ட்டிக்கு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதாக ஒயின் வர்த்தக சங்க கூட்டமைப்பின் தலைவர் கருணாகர் ஹெக்டே கூறியுள்ளார். இந்த நிலையால் பார்ட்டி செய்வதை படிப்படியாக குறைத்து வந்துள்ளனர். பப்கள் போட்ட முதலீட்டை எடுப்பது பெரிய சிரமமாக இருக்கும் என்கின்றனர்.